ระดับกลาง คือขั้นที่เริ่มพึ่งตัวเองได้: คุณตามใจความสำคัญของข้อความทมิฬจริงในหัวข้อที่คุ้นเคยได้ บทเรียนเหล่านี้ใช้ข้อความที่ยาวขึ้นและสำนวนที่เป็นธรรมชาติ คุณจึงได้พบภาษาในแบบที่คนใช้กันจริง
ใช้คำศัพท์ประมาณ 2,000 คำ และเรียนราว 350–400 ชั่วโมงเพื่อถึงระดับนี้
ชีวิตประจำวันระดับกลางபுதுடெல்லி,ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி இடம்பிடித்துள்ளார்.ஆசிய விளையாட்டு போட்டி20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணி நேற்று அறிவிக்கப்பட்டது.பவானி தேவிஇந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (சேபர் பிரிவு) இடம்பிடித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்த அவர், தற்போது ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.20 வீரர், வீராங்கனைகள் தேர்வுஇந்திய வாள்வீச்சு அணியில் மொத்தம் 20 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தன்ஷிகா காத்ரி, பிராச்சி (எபீ பிரிவு), கரண் சிங் (சேபர் பிரிவு), தேஜஸ் மனோஜ் பாட்டீல் (பாயில் பிரிவு) உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.இன்று பயிற்சி முகாம்ஆசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு இந்திய வாள்வீச்சு அணிக்கான பயிற்சி முகாம் பாட்டியாலாவில் இன்று தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
การเดินทางระดับกลางசென்னை, தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை (02.09.2026) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழைஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.இதன் காரணமாக இன்று (01-09-2026) மற்றும் நாளை (02-09-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.நாளை மறுநாள் (03-09-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.04-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.05-09-2026 மற்றும் 06-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:இன்று (01-09-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை:தமிழக கடலோரப்பகுதிகள்:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.வங்கக்கடல் பகுதிகள்:01-09-2026 மற்றும் 02-09-2026: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.03-09-2026 மற்றும் 04-09-2026: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.அரபிக்கடல் பகுதிகள் :01-09-2026: மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.02-09-2026 முதல் 04-09-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
การเดินทางระดับกลางகிர்கிஸ்தானில் PM மோடி - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்புஅமைதிக்கு இந்தியா ஆதரவளிக்கும் - பிரதமர் மோடிஜிடிபி 7.8%ஆக உயர்வு - பிரதமர் மோடி பெருமிதம்ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 7 மடங்கு அதிகரிப்பு - புதின்இன்று மேட்டூர் அணையில் நீர் திறந்து வைக்கிறார் CM விஜய்முதல்வர் வருகை - மேட்டூரில் ஏற்பாடுகள் தீவிரம்நேபாள வெள்ளம் - ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை நேபாள வெள்ளம் - 158 இந்தியர்கள் மீட்புநேபாளத்தில் மீட்கப்பட்ட 29 தமிழர்கள் டெல்லி வருகை"நேபாள் துயரம் - மீட்பு பணி பெரும் சவாலாக உள்ளது"சிந்து நதி நீர் ஒப்பந்தம் - இந்தியா திட்டவட்டம் நாசிக்கில் இருந்து ரயிலில் சென்னை வந்த 840 டன் வெங்காயம்
แฟนตาซี
கார்த்திக்க் மற்றும் திவ்யா ஆகியோர், பழமையான நார்ஸ் புராணங்களையும் நவீன திரைப்படங்களையும் ஒப்பிட்டு, மார்வெல் காமிக்ஸ் நிறுவனம் நார்ஸ் கடவுளான தோரை ஒரு சூப்பர் ஹீரோவாக எப்படி மாற்றியது என்பதைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
ความบันเทิง
கார்த்திக்கையும் திவ்யாவும் வீடியோ கேம்களை ஒரு முக்கியமான கலை வடிவமாகக் கருதலாமா என்பது பற்றி விவாதிக்கிறார்கள். நவீன கேம்களில் உள்ள கதை சொல்லல், இசை மற்றும் காட்சி வடிவமைப்பை அவர்கள் ஆராய்கிறார்கள்.
การศึกษา
கார்த்திக் மற்றும் திவ்யா ஆன்லைனில் படிப்பதையும் நேரடி வகுப்பறையில் கற்பதையும் ஒப்பிடுகிறார்கள். தொற்றுநோய் காலத்திலும் அதற்குப் பிறகும் அவர்கள் பெற்ற அனுபவங்களை வைத்து, நெகிழ்வுத்தன்மை, சுயஒழுக்கம், சமூகத் தொடர்பு மற்றும் எந்த முறை உண்மையில் மக்களுக்கு சிறப்பாகக் கற்க உதவுகிறது என்பதை ஆராய்கிறார்கள்.
ทำแบบทดสอบจัดระดับสั้น ๆ แล้วเราจะแนะนำว่าควรเริ่มตรงไหน
ทำแบบทดสอบระดับ