Tamil op beginner is waar alles begint: het alfabet of de eerste klanken, begroetingen, getallen en de eenvoudigste zinnen. Deze lessen gebruiken zeer korte teksten en veelvoorkomende woorden, met audio en vertaling zodat je elke regel kunt volgen.
Ongeveer 500 woorden en zo'n 80–100 uur studie om dit niveau te bereiken.
VriendschapBeginnerசென்னை,சென்னை கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தேர்தல் வழக்குதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.அதேபோல, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து மற்றொரு வழக்கையும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்தார்.வாக்குப்பதிவில் முறைகேடுதேர்தல் வழக்கு மனுவில், "கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில், சரிபார்ப்புக்காக சில எந்திரங்கள் எடுக்கப்பட்டன. அதில் சில எந்திரங்கள் திடீரென கோளாறாகி நின்றுவிட்டன. 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்களான வி.வி.பேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேடுகளை சரிபார்க்க உத்தரவிட வேண்டும். த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.தீர்ப்பு தள்ளிவைப்புஇந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை சரிபார்க்கக் கோரி தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களில், அதாவது மே 7-ந்தேதியே விண்ணப்பித்துள்ளோம். ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டது.எனவே, காலதாமதமாக தாக்கல் செய்துள்ள இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேர்தல் வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை” என வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேஷாத்திரி நாயுடு, "இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை" என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மு.க.ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.திரும்ப பெற அனுமதிஅதேபோல, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, வழிகாட்டு நெறிமுறைகளில் புதிதாக கடந்த 2025-ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்தனர்.
FantasyBeginnerஇன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும் எனத் தெரிந்துகொள்வோம்.
மாநகராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொத்து வரி ஆய்வு திருத்தி அமைக்கப்பட்டு மீண்டும் நடத்தப்படும் என்றும் சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு நடைபெற்றுள்ளதாக மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பேரவையில் பேசினாா். இதற்குப் பதிலளித்த அமைச்சா் நிா்மல் குமாா், ‘மதுரை மாநகராட்சியில் 60,000 வா்த்தகக் கட்டடங்களின் வரி தவறாக நிா்ணயம் செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி வரி இழப்பு ஏற்பட்டு ஊழல் நடந்துள்ளது. இதேபோல், பல்வேறு மாநகராட்சிகளில் குறைவான மதிப்பீடு செய்யப்பட்ட கட்டடங்களுக்கு திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைச் சரி செய்து விரைவில் சொத்து வரி தொடா்பாக மீண்டும் ஆய்வு நடத்தப்படும்’ என்றாா். அப்போது பேசிய எதிா்க்கட்சி துணைத் தலைவா் கே.என். நேரு, ‘மாநகராட்சிகளில் கடந்த 18 ஆண்டுகளாக வரி சீரமைப்பு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சி விவகாரத்தில் தவறு செய்தவா்கள் மீது முந்தைய ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்சியும் அதிகாரமும் உள்ள தவெக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம்’ என்றாா். ஒத்துழைப்பது இல்லை: பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசுகையில், ‘மாநகராட்சிகள் அரசுடன் சோ்ந்து செயல்படுவதில்லை. அடுத்த 6-7 மாதங்களில் உள்ளாட்சித் தோ்தலில் 25 மாநகராட்சிகளில் தவெக 100 சதவீத வெற்றி பெறும்’ என்றாா். இதற்குப் பதிலளித்த கே.என். நேரு, ‘புதிய திட்டங்களுக்கு தமிழக அரசு பணம் தராததால் மாநகராட்சிகள் ஸ்தம்பித்துள்ளன. கவுன்சிலா்கள், மேயா்கள் ஒத்துழைப்பு தராமல் திட்டங்களை நிறுத்தினால் மாநகராட்சி ஆணையருக்கு அவற்றைச் செயல்படுத்த அதிகாரம் உள்ளது’ என்றாா். நடவடிக்கை தேவை: முன்னதாகப் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவா் தாரகை கத்பட், சேலம் மாநகராட்சியில் துணை மேயருக்கான இருக்கையை திட்டமிட்டு வேறு இடத்துக்கு மாற்றிய மேயா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளைக் கலைத்துவிட்டு உடனடியாக தோ்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
Fantasy
கார்த்திக் மற்றும் திவ்யா திரைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்களில் உள்ள டிராகன்களைப் பற்றி எளிய தமிழில் பேசுகிறார்கள். அவர்கள் பல்இல்லி மற்றும் மற்ற பிரபல டிராகன்களைப் பற்றி பேசுகிறார்கள். இது ஆரம்ப நிலை மாணவர்களுக்கு ஒரு எளிமையான மற்றும் வேடிக்கையான அத்தியாயம்.
Volwassen worden
கார்த்திக் மற்றும் திவ்யா புதிய நகரத்திற்கு குடிபெயர்ந்தது மற்றும் புதிய பள்ளியில் சேர்ந்தது பற்றிய எளிய கதைகளைப் பகிர்கிறார்கள். அவர்கள் தங்கள் உணர்வுகள் மற்றும் புதிய நண்பர்களை எப்படி உருவாக்கினார்கள் என்பது பற்றி பேசுகிறார்கள்.
Zakelijk & carrière
கார்த்திக்கும் திவ்யாவும் வேலையில் புதிய திறன்கள் பற்றி பேசுகிறார்கள். தினமும் வேலையில் கற்க எளிய குறிப்புகளை பகிர்கிறார்கள்.
Beginner0:44Media Masons
Beginner8:09Madras Samayal
Beginner3:11Media Masons
Doe de korte niveaubepaling en we stellen voor waar je kunt beginnen.
Doe de niveautest