Στο στοιχειώδες τα Ταμιλικά σου περνούν από μεμονωμένες φράσεις σε απλές συνδεδεμένες προτάσεις. Συναντάς καθημερινές καταστάσεις: ψώνια, οδηγίες, οικογένεια, δουλειά και σχέδια. Αυτά τα μαθήματα κρατούν τη γλώσσα καθαρή ενώ φέρνουν περισσότερη ποικιλία.
Περίπου 1.000 λέξεις και γύρω στις 180–200 ώρες μελέτης για να φτάσεις σε αυτό το επίπεδο.
ΥγείαΣτοιχειώδεςஇன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் எனத் தெரிந்துகொள்வோம்.
ΨυχαγωγίαΣτοιχειώδεςஈரோடு,ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய், பாலுக்கான கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, ஒரு லிட்டர் ரூ.44 கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதேநேரத்தில் மாட்டுத்தீவனம் விலை உய ராமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் புதிதாக ஒரு அனல்மின் நிலையம் உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே உள்ள அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் தனியார் முதலீட்டில் அனல்மின் நிலையம் என்பது மின்சார கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே தூக்குத்துகுடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மேலும் அனல்மின் நிலையங்களுக்கு பதிலாக மாற்று வழிகளை பயன்படுத்தி மின்சார தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும்.டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல் அமைச்சர் விஜய், இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார். இந்த ஆண்டு குறுவை சாகுபடி என்பது முற்றிலும் இல்லாமல் போய், ஒருபோக சாகுபடியா வது முழுமையாக நடைபெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருக்கிறார்கள். எனவே கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய 18 டி.எம்.சி. தண்ணீரை வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் சாகுபடி நிறைவு பெறாமல் விவசாயிக ளுக்கு நஷ்டம் தான் ஏற்படும். மேலும் தரமான விதை, உரம் உள்ளிட்டவைகள் தேவையான அளவுக்கு இருப்பு இருப்பதை அரசு உறுத்திப்படுத்த வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Επιχειρήσεις & καριέραΣτοιχειώδεςஸ்ரீவில்லிபுத்தூர்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரானது ஆண்டாள் பிறந்த பூமி ஆகும். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு தொழிலில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக தயாரிக்கப்படும் பால்கோவா 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தற்போது சீனி விலை அதிகரித்து உள்ளது. இதனால் பால் கோவா விலையை உயர்த்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.கிலோவுக்கு ரூ.40 வரை உயர்வுஅதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 1 கிலோ பால் கோவா ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.40 விலை உயருகிறது. மேலும் பால் அல்வா ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.பால்கோவாவில் இருந்து தயாரிக்கப்படும் பால் கேக் மற்றும் திரட்டி பால் போன்றவை விலையும் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Τρόμος & μυστήριο
கார்த்திக்கின் நண்பர் சுரேஷ் வீட்டில் நடந்த ஒரு பயமுறுத்தும் அனுபவத்தை வைத்து, கார்த்திக் மற்றும் திவ்யா இருவரும் கண்ணாடியில் பேய் பார்க்கும் பிரபலமான நாட்டுப்புறக் கதையையும், அதன் பின்னால் உள்ள உளவியல் விளக்கத்தையும் எளிமையாகப் பேசுகிறார்கள்.
Έμπνευση & χιούμορ
கார்த்திக் மற்றும் திவ்யா, ஹார்லண்ட் சாண்டர்ஸின் உண்மையான கதையைச் சொல்கிறார்கள். அவர் அறுபத்தி ஐந்து வயதில் தன் உணவகத்தை இழந்தார், ஆனால் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறுப்புகளை எதிர்கொண்டு, அவர் ஒரு உலகளாவிய வணிகத்தை உருவாக்கினார். மீண்டும் தொடங்குவதற்கு ஒருபோதும் தாமதமாகாது என்பதை இது நிரூபிக்கிறது.
Έμπνευση & χιούμορ
கார்த்திக் மற்றும் திவ்யா வெவ்வேறு கலாச்சாரங்களில் நகைச்சுவை எப்படி மாறுகிறது என்பதைப் பற்றி பேசுகிறார்கள். ஆச்சரியம், சரியான நேரம், மற்றும் உடல் நகைச்சுவை எல்லா இடங்களிலும் மனிதர்களை இணைக்கின்றன என்பதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.
Κάνε το σύντομο τεστ τοποθέτησης και θα σου προτείνουμε από πού να ξεκινήσεις.
Κάνε το τεστ επιπέδου