Přejít na obsah
Vyšší středně pokročilý

Tamilština: úroveň Vyšší středně pokročilý

Na úrovni vyšší středně pokročilý plynule čteš a posloucháš jazyk tamilština na mnoho témat. Tyto lekce zahrnují zprávy, názory a delší příběhy, se slovní zásobou, díky které sleduješ argumenty a vyjadřuješ vlastní názory.

Co zvládneš na úrovni vyšší středně pokročilý

  • Sledovat delší řeč a většinu zpravodajství.
  • Zapojit se do konverzace s přirozeným tokem.
  • Číst články a beletrii bez neustálé pomoci.

Na dosažení této úrovně potřebuješ asi 4 000 slov a zhruba 500–600 hodin studia.

Lekce jazyka tamilština pro vyšší středně pokročilý

CestováníVyšší středně pokročilý
Daily Thanthi1. 9.

பெண்கள் ஆசிய கோப்பை - இந்தோனேசியாவை சுருட்டிய வங்காளதேசம்... 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

துபாய்,பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனேசியாவை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. பெண்கள் ஆசிய கோப்பைபெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாயில் இத்தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.டாஸ்இதற்கிடையில், இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம், இந்தோனேசியா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தோனேசியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.129 ரன்கள்இதையடுத்து, களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சோபனா மோஸ்தரி அதிகபட்சமாக 40(42) ரன்கள் எடுத்தார். 58 ரன்கள் தொடர்ந்து 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தோனேசியா, வங்காளதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 17.3 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் வங்காளதேச அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ZdravíVyšší středně pokročilý
Dinamani1. 9.

ஆர்ஜென்டீனா அணியிலிருந்து மெஸ்ஸி ஓய்வு

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக, நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி (39) திங்கள்கிழமை அறிவித்தார். சர்வதேச கால்பந்து களத்திலிருந்து விடைபெற்றிருக்கும் அவர், கிளப் கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிகிறது. டியேகோ மாரடோனாவுக்கு பிறகு சர்வதேச களத்தில் ஆர்ஜென்டீனாவின் கால்பந்து கதாநாயகனாக மிளிர்ந்த மெஸ்ஸி, சுமார் 20 ஆண்டுகள் தேசிய அணிக்காக விளையாடியிருக்கிறார். ஆர்ஜென்டீனாவுக்காக மெஸ்ஸி 6 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியிருக்க, அவர் தலைமையில் அந்த அணி 2022}இல் சாம்பியன் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நடப்பாண்டு போட்டியில் இறுதி ஆட்டம் வரை வந்து, அதில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டது. இந்நிலையில், ஓய்வு முடிவை அறிவித்து தனது ’இன்ஸ்டாகிராம்' சமூக வலைதள கணக்கில் மெஸ்ஸி வெளியிட்ட பதிவு: ”இது வலி தரக்கூடிய முடிவாக இருந்தாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரமாகும். கடந்த சில காலமாக பெற்ற வெற்றிகளின்போது மட்டும் அல்லாமல், அதற்கு முன்பாகவுமே ஆர்ஜென்டீனா அணிக்காக நான் முழுமையான அர்ப்பணிப்புடன் விளையாடினேன் என்பதை உறுதியாகக் கூறுவேன். ஆர்ஜென்டீன குடிமக்களாக நீங்கள் பெருமை மற்றும் மகிழ்ச்சி கொள்வதற்காக, களத்தில் எப்போதும் நான் கடுமையாகப் போராடியதுடன், தேவையான அனைத்தையும் செய்திருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் காட்டி வந்த அன்புக்கு நன்றி. இனி உங்களில் ஒருவனாக இருந்து ஆர்ஜென்டீன அணிக்கு ஆதரவும், உற்சாகமும் அளிக்கப் போகிறேன். ஒரு காலத்தில் நாம் கனவாகக் கொண்டிருந்த தருணங்களை, எனது சக வீரர்களுடன் இணைந்து உங்களுக்கு நிஜமாக்கிக் கொடுத்த மன அமைதி மற்றும் பெருமையுடன் நான் விடைபெறுகிறேன். அந்த வெற்றிகளை உங்களோடு கண்டது அற்புதமானது” என்று அதில் மெஸ்ஸி கூறியுள்ளார். நடப்பாண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டு 2 நாள்களுக்குப் பிறகு (ஜூலை 21) இந்த ஓய்வு முடிவு கடிதத்தை தாம் எழுதிவிட்டதாகவும், அப்போது தனது தந்தை உடல்நலக்குறைவுடன் இருந்ததால் முடிவை தாமதித்ததாகவும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலமானார். சர்வதேச களத்திலிருந்து ஓய்வு பெற்ற மெஸ்ஸி, கிளப் போட்டிகளில் தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன், பார்சிலோனா எஃப்சி, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.

JídloVyšší středně pokročilý
Dinamani1. 9.

முந்தைய ஆட்சிகள் மதுநோயாளிகளை உருவாக்கின: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

‘மதுவிலக்கை ஒரே கையொப்பத்தில் அமல்படுத்திவிடலாம்; ஆனால், முந்தைய ஆட்சிகள் தமிழகத்தில் மதுநோயாளிகளை அதிக அளவில் உருவாக்கியுள்ளதால் அவா்களுக்கு மறுவாழ்வு மையங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன’ என்று பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா். பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டப்பேரவை குழுத் தலைவா் செளமியா அன்புமணி, ‘பெண்களிடம் சேமிப்பாக இருக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் டாஸ்மாக்கில் வசூலாகிறது. மதுபோதையால் சாலை விபத்துகள் அதிகரிக்கின்றன. இதனால் இளம் பெண்கள் கணவரை இழப்பது அதிகரித்து வருகிறது. பூரண மதுவிலக்கு எனக் கூறும் அரசுகள் அதை செய்வதில்லை’ என்றாா். அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, ‘தமிழகத்தில் மணல் மற்றும் டாஸ்மாக்கில் அதிக ஊழல் நடந்தது. விளிம்புநிலை மக்கள் அதிகமாக உள்ள வடமண்டலத்தில் அதிக அளவில் மது விற்பனையாகிறது. ஒரே நாளில் கையொப்பமிட்டு மதுவிலக்கை ஏற்படுத்திவிடலாம். ஆனால், தமிழகத்தில் முந்தைய ஆட்சிகள் உருவாக்கிய அதிக அளவிலான மது நோயாளிகளுக்கு மறுவாழ்வு மையங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை உருவாக்கவும், மதுகுறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள், இளைஞா்களால் உருவாக்கப்பட்ட தவெக அரசு மதுவிலக்குக்கு தீா்வு காணும். முந்தைய ஆட்சியில் டாஸ்மாக்குக்கு மதுபானங்களை விநியோகிக்க 13 நிறுவனங்களுக்கு உரிமை வழங்கியதில் வெளிப்படைத் தன்மை இல்லை. ஆட்சியில் இருந்த திமுகவினருக்கே இந்த உரிமம் வழங்கியது ஆதாயம் தரும் செயல் என்பதால் இது ஊழலாகும். தவெக அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் யாரும் மதுபான தொழிலில் ஈடுபடமாட்டாா்கள். ஊழல் குற்றச்சாட்டில் மதுபான ஆலைகளை மூட வேண்டும் என்றாா். திமுகவினரை குறிப்பிட்டு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு திமுகவினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது பேசிய முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, ‘திமுகவின் கொள்கை முழு மதுவிலக்காகும். திமுகவுக்கு அவப் பெயா் ஏற்படுத்த வேண்டி உண்மைக்குப் புறம்பான ஊழல் வழக்கு போடப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீா்ப்புக்கு பிறகு உண்மை நிரூபணமாகும்’ என்றாா். பெட்டிச் செய்தி... ‘மதுபாட்டிலுக்கு ரூ.10 வாங்கக் கூறியது திமுக’: அமைச்சா் பேச்சால் பேரவையில் அமளி டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5- ஆக இருந்ததை ரூ.10-ஆக அதிகரித்து வாங்கக் கூறியது திமுகவும், அதிகாரிகளும்தான் என ஊழியா்கள் தெரிவித்தனா் என்றாா் அமைச்சா் விக்னேஷ். சட்டப்பேரவையில் இதுதொடா்பான கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது, ரூ.10 என்பது ரூ.20-ஆக அதிகரித்துள்ளதை ஏன் தவெக அரசு தடுக்கவில்லை கே.என்.நேரு கேள்வி எழுப்பினாா். அப்போது பேசிய அமைச்சா் விக்னேஷ் ரூ.14,000 என்ற குறைவான ஊதியத்தை டாஸ்மாக் விற்பனையாளா்கள் பெறுகின்றனா். இதனால் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.5-ஆக வாங்கப்பட்டு வந்ததை ரூ.10-ஆக உயா்த்த கூறியதே முந்தைய திமுக ஆட்சிதான் என ஊழியா்கள் கூறுகின்றனா். இதைச் சீரமைப்பது சாதாரணமான காரியம் அல்ல’ என்றாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.

Vyšší středně pokročilý23:15

Vzdělávání

கல்லூரி செலவுகளும் மாணவர் கடன் பொறியும்

கார்த்திக்கின் நண்பர் சுரேஷ் தனது கல்விக் கடனை இன்னும் அடைத்து வருகிறார். கார்த்திக் மற்றும் திவ்யா ஆகியோர் பல்கலைக்கழகப் படிப்பின் அதிகரித்து வரும் செலவு, மாணவர் கடன்களின் சுமை, பாரம்பரியப் பட்டம் இன்றும் அவசியமா என்ற கேள்வி, மற்றும் இளைஞர்களுக்கான மாற்று வழிகள் குறித்து விவாதிக்கின்றனர்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Poslouchej a uč se
Vyšší středně pokročilý22:23

Fantasy

ஹாரி பாட்டர் மற்றும் ஒரு உலகளாவிய ரசிகர் கூட்டத்தின் உருவாக்கம்

கார்த்திக் மற்றும் திவ்யா ஆகியோர், பல பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கையெழுத்துப் பிரதியிலிருந்து ஹாரி பாட்டர் எவ்வாறு வரலாற்றின் மிகப்பெரிய ரசிகர் கூட்டங்களில் ஒன்றாக வளர்ந்தது என்பதையும், அந்த நிகழ்வு நவீன ரசிகர் கலாச்சாரத்தைப் பற்றி என்ன வெளிப்படுத்துகிறது என்பதையும் ஆராய்கின்றனர்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Poslouchej a uč se
Vyšší středně pokročilý22:49

Fantasy

கற்பனை ரோல்-பிளேயிங் விளையாட்டுகளின் பின்னணியில் உள்ள உளவியல்

கார்த்திக் மற்றும் திவ்யா ஆகியோர், டன்ஜியன்ஸ் அண்ட் டிராகன்ஸ் முதல் பெரிய வீடியோ கேம் உலகங்கள் வரையிலான கற்பனை ரோல்-பிளேயிங் விளையாட்டுகள் ஏன் லட்சக்கணக்கான வீரர்களுக்கு உளவியல் ரீதியாக மிகவும் கவர்ச்சிகரமானவை என்பதை ஆராய்கின்றனர்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Poslouchej a uč se

Tamilština vyšší středně pokročilý podle témat

Další úrovně jazyka tamilština

Nejsi si jistý/á, že je to tvá úroveň?

Udělej si krátký zařazovací test a doporučíme ti, kde začít.

Udělat test úrovně

Otázky k jazyku tamilština na úrovni vyšší středně pokročilý

Co je úroveň Vyšší středně pokročilý v jazyce tamilština?
Na Antlangu je Vyšší středně pokročilý jednou ze šesti úrovní, které popisují, jak dobře zvládáš jazyk tamilština. Plynulá konverzace.
Kolik slov v jazyce tamilština potřebuji pro vyšší středně pokročilý?
Dobrým cílem pro vyšší středně pokročilý je kolem 4 000 slov. Číslo závisí na jazyce a na tom, která slova si vybereš. Nejdřív se uč ta nejčastější.
Jak dlouho trvá dosáhnout úrovně vyšší středně pokročilý v jazyce tamilština?
Zhruba 500–600 hodin studia celkem, u anglicky mluvícího studenta, který se učí jazyk průměrné obtížnosti. Krátké denní lekce s obsahem na tvé úrovni fungují lépe než vzácné dlouhé.